கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ்ராஜனின் ஆலோசனைபடி குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம் மணவை பேரூ...
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ்ராஜனின் ஆலோசனைபடி குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம் மணவை பேரூர் மற்றும் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலினின் 43-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
மணவை பேரூர் செயலாளர் நிஜாம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளம்பிறைசேக், மணவை பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிபி வியாஸ், துரை, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் செல்லப்பன் ஒன்றிய மாணவர் அணி அமைப்பளர் மாணிக் பிரபு, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மணவை எம். அஜித் ரகுமான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு பட்டாசு வெடிக்கப்பட்டது.
No comments