இரணியல் அருகே நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவீன் உதயகுமார் (வயது 33). இவர், நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி எதிரே பழக்...
இரணியல் அருகே நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவீன் உதயகுமார் (வயது 33). இவர், நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி எதிரே பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நடந்து 4 மாதங்களே ஆகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வேர்கிளம்பி பகுதியில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு பிரவீன் உதயகுமார் சென்றார்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அவர், கன்னியாகுமரி சர்ச்ரோடு பகுதியை சேர்ந்த நண்பர் கெவின் (35) என்பவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே மேக்காமண்டபம்-அழகியமண்டபம் சாலையில் பிலாங்காலை சர்ச் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்த போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது.
இதனால் கெவின் நிலைதடுமாறினார். அப்போது மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கெவின், பிரவீன் உதயகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம்-பக்கத்தினர் இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்றுகாலை பிரவீன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் நடந்த 4 மாதத்திலேயே புது மாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments