மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 38). இஸ்ரோவில் ஊழியராக பணியாற்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 38). இஸ்ரோவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் செந்தில் குமார் பைக்கில் முட்டம் – இரணியல் சாலையில் சென்று கொண்டிருந்தார். திருநயினார்குறிச்சி பகுதியில் செல்லும்போது, குலாளர்தெருவை சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
கார், செந்தில்குமார் மீது மோதி, அருகில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியும் நிற்காமல், அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த சிட்அவுட்டும் சேதமடைந்தது. படுகாயம் அடைந்த செந்தில்குமார் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமானிக்கப்பட்டது.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments