மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை சாத்தன்விளை பகுதியை சேர்ந்தவர் ஐயாத்துரை (வயது 70). வாழைக்குலை வியாபாரம் செய்துவந்தார். நேற்று முன்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை சாத்தன்விளை பகுதியை சேர்ந்தவர் ஐயாத்துரை (வயது 70). வாழைக்குலை வியாபாரம் செய்துவந்தார்.

நேற்று முன்தினம் இவர் பைக்கில் கருங்கல் சென்றுவிட்டு இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மண்டைக்காடு அருகே வரும்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஐயாத்துரை பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஐயாத்துரை படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த ஐயாத்துரையை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
No comments