குமரி (கி) மாவட்ட திமுக சார்பில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை செப்பனிடாத நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து...
குமரி (கி) மாவட்ட திமுக சார்பில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை செப்பனிடாத நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கிருஷ்ணன்கோவில் பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அரசு குடிநீர்வரிய உதவி பொறியாளர் நேரடியாக வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின்படி 10 நாட்களுக்குள் சாலைகள் சரிசெய்யப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்தார்.அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதிகாரியின் உறுதிமொழிக்கேற்ப 10 நாட்களுக்குள் சாலைகள் சரிசெய்யப்படவில்லை என்றால்,மீண்டும் மறியல் போராட்டம் தொடரும் என்பதை இதன் வாயிலாக மாவட்ட கழக செயலாளர் N.சுரேஷ்ராஜன்.MLA., தெரிவித்தார்.
மாநகர செயளாளர் மகேஷ் தில்லைசெல்வம், ஹெலன்டேவிட்சன் இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர் முன்னாள் கவுன்சிலர்கள் சைமன்ராஜ் ஜெயசிங், சாகுல், சீதாமுருகன், பெஞ்சமின் வட்ட செயளாளர்கள் சார்லஸ், ஜவகர் ராஜன் பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் நாகராஜன் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
செய்யது அஹ்மது கரீம்
மாதவலாயம்
No comments