உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா பாண்டே என்னும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மோதிநகர் துணை கலெக்டராக பணியாற்றி வந்தார். இவர்...
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா பாண்டே என்னும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி மோதிநகர் துணை கலெக்டராக பணியாற்றி வந்தார்.

இவர் ஜூலை முதல், கொரோனா தடுப்பு பணிக்கான தனி அதிகாரியாக, காசியாபாத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். திருமணமாகி கர்ப்பிணியாக இருந்த சவுமியா செப்டம்பரில் பிரசவத்திற்காக லீவில் சென்றார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை செய்து வந்த சவுமியாவுக்கு பிரசவம் முடிந்து 14 நாட்களில், கைக்குழந்தையுடன் அலுவலக வேளைக்கு திரும்பியுள்ளார். இதை கண்ட பணியாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
அர்ப்பணிப்புடன் பணிபுரியும் சவுமியா பேசுகையில், "குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை, பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார்.
கைக்குழந்தையுடன் அலுவலக நிர்வாக பணியையும் கவனித்து கொள்வது கடவுளின் ஆசியாக கருதுகிறேன் என கூறினார்.
No comments