குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தில் கலவா மீன்கள் ஏராளமாக பிடிபடுகின்றன. கொரோனா பாதிப்பால் சீனாவுக்கு ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் கலவா மீன்களின் வி...
குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தில் கலவா மீன்கள் ஏராளமாக பிடிபடுகின்றன. கொரோனா பாதிப்பால் சீனாவுக்கு ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் கலவா மீன்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

குமரி கடலில் பிடிக்கப்பட்டும் மீன்களுக்கு வெளிநாட்டில் மவுசு உள்ளதால் உயர்ரக மீன்களான கணவாய், இறால், கேரை, சுறா, கலவா போன்ற மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன.
மீன்பிடி பருவகாலங்களில் வியாபாரிகள் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் போன்ற மீன்பிடி துறைமுகங்களில் முகாமிட்டு மீன்களை வாங்கி செல்வர்.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணத்தில் வள்ளம், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிக வருவாயை ஈட்டி தருவது கலவா மீன்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் மீனவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி மீன்களை உள்ளூர் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் வேறு வழியின்றி குறைந்த விலைக்கே கொடுக்கும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கடியப்பட்டணம் மீனவர் புஷ்பராஜ் கூறும்போது:-
இங்கு பிடிக்கப்படும் உயர்ரக மீன்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கடியப்பட்டணம் கடல்பகுதியில் கலவா மான்கள் அதிகமாக கிடைக்கிறது. ஏற்றுமதி வியாபாரிகள் மீன்வாங்க வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வருகின்றனர்.
இதனால் கிலோ ரூ.700-க்கு விற்ற கலவா மீன்கள், தற்போது ரூ.140-க்கு தான் விற்கப்படுகிறது. இதனால் இந்த வகை மீன்களை பிடிக்கும் மீனவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை, எனக்கூறினார்.
No comments