கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியில் பிராங்க்ளின் பிரிட்டோ(40) - கரோலின் (31) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை...
கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியில் பிராங்க்ளின் பிரிட்டோ(40) - கரோலின் (31) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே பிரிட்டோ கழுத்து, வயிறு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கணவர் பிராங்க்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் மார்பு பகுதியில் கத்தி பதிந்ததாகவும் மனைவி கரோலின் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால் அவர் அளித்த தகவலில் சந்தேகமடைந்த போலீசார் கரோலினிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத் தேவைக்காக அடமானம் வைத்த தாலியை மீட்பது தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரை குத்திக் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, கரோலினை போலீசார் கைது செய்தனர்.
No comments