நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதியை சேர்ந்தவர் 49 வயதான சித்ரா. இவர் கடந்த 18-ம் தேதி அதிகாலை தனது வீட்டின் முன்பு கோலம் போடச் சென்றார். அப்போ...
நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதியை சேர்ந்தவர் 49 வயதான சித்ரா. இவர் கடந்த 18-ம் தேதி அதிகாலை தனது வீட்டின் முன்பு கோலம் போடச் சென்றார். அப்போது திடீரென பயங்கர அலறல் சப்தம். பதறியபடி அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார் சித்ரா. அருகாமையில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்த போது மர்ம கும்பல் ஒன்று சித்ராவை கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தெளிவாக யாருடைய முகமும் பதிவாகவில்லை. சம்பவம் நடைபெற்ற போது அந்த பகுதியில் இன்கமிங் அவுட்கோயிட் சென்ற செல்போன்களின் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு செல்போன் நம்பரில் இருந்து கொலையான சித்ராவின் வீட்டின் மாடியில் குடியிருக்கும் பிருந்தா எனும் பெண்ணின் நம்பருக்கு அடிக்கடி அவுட் கோயிங் கால் சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக பிருந்தாவை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் பிருந்தா, கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். கணவர் வெளிநாட்டில் இருந்ததால் பிருந்தாவின் வீட்டிற்கு நாகை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற செயலாளர் ரியாஸ் போக்கும் வரத்துமாக இருந்துள்ளார். தனிமையில் தவித்த பிருந்தாவுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் ரியாசிடம் இருந்து கிடைத்துள்ளது. ஒரு நாள் இருவரும் வாடகை வீடு, கதவு திறந்திருப்பதையும் மறந்து உல்லாசத்தில் திளைத்திருந்த போது வீட்டு உரிமையாளர் சித்ரா பார்த்துள்ளார்.
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு விஜய் ரசிகரோடு பிருந்தா பின்னிப் பிணைந்து உல்லாசமாக இருந்ததை பார்த்து கொதித்துள்ளார் சித்ரா. அதாடு ரியாஸ் இனி அங்கு வரக்கூடாது என்று கண்டித்துள்ளார் சித்ரா. இதனால் மீண்டும் பிருந்தா தனிமையில் தவிக்க, ரியாஸ் ஆசை நாயகயை நெருங்க முடியவில்லை. இதனால் சித்ராவை போட்டுத்தள்ளினால் மட்டுமே மறுபடியும் பிருந்தாவுக்கு ஆதரவாக இருக்க முடியும் என்று கடந்த 18-ம் தேதி கூலிப்படையுடன் வந்து சித்ராவை சம்பவம் செய்துள்ளார் ரியாஸ்.
விசாரணையில் நடந்தவற்றை அப்படியே பிருந்தாவும், ரியாசும் கக்கிய நிலையில் இருவரும் தற்போது தனித்தனியாக கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது தேக சுகம் தேடி அலைந்த பிருந்தாவால் 3 குடும்பம் நிர்கதியாகியுள்ளது.
No comments