தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரு...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பொதுமுடக்கம் காரணமாக வருமானம் இல்லாததால் கதிரவன் தனது இரண்டு மகள்களையும் வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கதிரவன் தனது இரண்டு மகள்களையும் குளிப்பாட்டி விட்டு, பட்டு சட்டை மற்றும் பட்டு பாவாடை உடுத்திவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாமி கும்பிட்டுவிட்டு தனது மகள்களுடன் செல்பி எடுத்து அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதன்பிறகு கதிரவன் கடைக்கு சென்று சிக்கன் குஸ்கா வாங்கி அதில் விஷத்தைக் கலந்து தனது இரண்டு மகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டார்.
மயங்கிக் கிடந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
கதிரவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கதிரவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்றும் அதன் காரணமாகத்தான் அவரது மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments