Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பரில் முடிவுக்கு வரும்: நிபுணர்கள் கணிப்பு

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது...

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என சுகாதார அமைச்சகத்தின் இரு பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணிதமுறை மாதிரி ஆய்வின் படி அவர்கள் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணகம் (Coefficient) 100 சதவிகித வரம்பை எட்டி, தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு, எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொது சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், தொற்று மற்றும் குணமடைதல் என்னும் இரண்டு கூறுகளும் உட்படுத்தி, பெருந்தொற்றின் முழு அளவையும், பரவலான தன்மையையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

”தொடரும் தொற்று” என்னும் மாதிரியில் அடிப்படையில் இந்த மாதிரி ஆய்வு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது குணமடைந்தோ அல்லது இறந்தோ போகும்வரை பாதிக்கப்பட்ட நபர் தொற்றை மற்றவர்களுக்கு பரப்புகிறார்.
பாதிக்கப்பட்ட விகிதம் மற்றும் குணமடைந்தவர்களின் விகிதம் ஆகிய இரண்டுக்கு இடையிலான ரிக்ரெஷன் பகுப்பாய்வும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு ஒரு கருவியாக இருக்கும் என்றும், தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டால் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கான வரம்புகளையும் குறிப்பிடும் நோக்கில், இது மிகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைத்த தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...