குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உதயமார்த்தா...
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 39 வயது போலீஸ்காரர், சென்னை திருவள்ளூரில் பணியில் உள்ளார். இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரில் களியக்காவிளை வந்தார்.
கடந்த 4-ம் தேதி இவரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் மருத்துக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரீத்தாபுரம் இரும்பிலியை சேர்ந்த 8 வயது சிறுவன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பெற்றோருடன் கடந்த 29-ம் தேதி சென்னையில் இருந்து காரில் வந்தான். 30-ம் தேதி மாதிரி எடுக்கப்பட்டு, முதலில் நெகட்டிவ் என வந்தது.
பெற்றோருக்கு இருந்ததை தொடர்ந்து, 2-வது முறையாக நேற்று முன்தினம் எடுக்கப்பட்டது. அதில் சிறுவனுக்கு தொற்று உறுதியானது. பெங்களூரில் இருந்து வந்த கண்டன்விளையை சேர்ந்த இளம்பெண், சென்னையில் இருந்து வந்த கொட்டாரத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண், ஒரே காரில் வந்த காப்புக்காடு பகுதியை சேர்ந்த 43 வயது வாலிபர், அவரது மகன், 43 வயது உறவினர், உறவினரின் மனைவி 40 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.
இதனால் தற்போது எண்ணிக்கை 110 ஆகி உள்ளது. இவர்களில் 59 பேர் குணமடைந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமானவர்கள் எண்ணிக்கை 61 ஆனது. 2 பேர் திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments