நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில், தற்போது 5-கட்ட ஊரடங்க...
நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

அதன்படி கட்டுபாடுகளுடன், வழிபாட்டுத்தலங்களையும் ஜூன் 8-ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் எந்த நேரத்திலும் வழிப்பாட்டு தலங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான முக்கிய கோயில்களில் கிருமிநாசினி தெளித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நேற்று மதியம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் நடந்தது.
கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். பின்னர் கோயில் சுற்று பிகாரங்களிலும், கைப்பிடிகள், கள் தூண்கள் உள்ளிட்டவற்றிலும் கிருமிநாசினி தெளித்தனர். இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆணையர் சரவணகுமார் கூறும்போது: வழிபாட்டு தலங்கள் திறந்தால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்கள் திறப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினார்.
No comments