சென்னை சோழிங்கநல்லூரில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில் ஊரடங்களால் அங்கேயே சிக்கி கொண்டார். இதனால் அந்த...
சென்னை சோழிங்கநல்லூரில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில் ஊரடங்களால் அங்கேயே சிக்கி கொண்டார். இதனால் அந்த பெண் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தனது கைக்குழந்தையுடன் கஷ்டபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டு வாடகை கொடுக்கவில்லை என வீட்டின் உரிமையாளர் கர்ப்பிணியை வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தி ஊடகங்களில் தீயாக பரவ இதை கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ வை அழைத்து உதவி செய்ய வலியுறுத்தினார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அப்பெண்ணை நேரில் சந்தித்து மூன்று மாத வாடகை மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்கியுள்ளார்.
No comments