எல்லைகளில் காணக்கூடிய எதிரிகளாக இருந்தாலும், கொரோனா வைரஸ் போன்ற கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தாலும், அனைத்து எதிரிகளையும் அழிக்க தனது அ...
எல்லைகளில் காணக்கூடிய எதிரிகளாக இருந்தாலும், கொரோனா வைரஸ் போன்ற கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தாலும், அனைத்து எதிரிகளையும் அழிக்க தனது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்லைன் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ராணுவ உற்பத்தியில் இந்தியா தன்னம்பிக்கை அடைய வேண்டும் மற்றும் கொள்கை கட்டமைப்பைக் கொண்டு வருவதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்புத் துறையை அரசு ஆதரிக்கிறது.
கண்ணுக்கு தெரியக்கூடிய எல்லைகளில் காணக்கூடிய எதிரிகளாக இருந்தாலும், கொரோனா வைரஸ் போன்ற கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தாலும், நாட்டின் அனைத்து எதிரிகளையும் அழித்து, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தனது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தொடர்ந்து பங்களிப்பதன் மூலம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கடந்த மூன்று, நான்கு மாதங்களில் பயோ-சூட், சானிடைசர் டிஸ்பென்சர், பிபிஇ கிட்கள் போன்ற 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது.
பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கலை அடைவதற்கு மத்திய அரசு, புதிய இலக்குகளை நிர்ணயித்து சரியான கொள்கை கட்டமைப்பை வகுத்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு மாற்று இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத்தின் நிகர இறக்குமதியாளருக்கு பதிலாக நிகர ஏற்றுமதியாளராக இந்தியா வெற்றிபெறும் போதுதான் நாங்கள் உண்மையிலேயே தன்னம்பிக்கை அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments