குஜராத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில...
குஜராத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மஹாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களாக குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில், குஜராத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 15-ம் தேதி 766 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, ஏப்ரல் 22-ம் தேதி 2407 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி 36 இறப்புகள் இருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 67 பேர் உயிரிழந்து, தற்போது மொத்தம் 103 இறப்புகளை சந்தித்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஸ்டிராவிற்கு அடுத்த இடத்தில் குஜராத் உள்ளது.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் மொத்தமே நேற்று 124 பேர் மட்டுமே புதிதாக தொற்று உறுதியானது.
அதேபோல், வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் இதுவரை 49 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், அசாமில் 34 பேரும், மேகாலயாவில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments