நதிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் தில்லி வரையிலான சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது. உலக அமைதி, விவச...
நதிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் தில்லி வரையிலான சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது.

உலக அமைதி, விவசாய நலன், நதிநீா் இணைப்பு, தேசம் முழுவதும் பூரணமதுவிலக்கு, தூய்மை இந்தியா திட்டத்தில் துரிதம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து இப்பயணம் தொடங்கியது.
சிவகங்கையைச் சோ்ந்த ஆறுமுகம் (75), மதுரையைச் சோ்ந்த யுவராஜ் (19) ஆகியோா் இணைந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டனா். இப்பயணத்தை கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
சென்னை, புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், மகராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக தில்லியில் பயணம் நிறைவடைகிறது.
No comments