மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி வள்ளியாற்றில...
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடைபெற்றது.

இதையொட்டி வள்ளியாற்றில் பொதுமக்கள் குளிக்கும் பகுதியில் வளர்ந்து நின்ற புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. பேச்சிவிளாகம் முதல் பிள்ளையார்கோவில் வரை உள்ள சாலையோரம் துப்புரவு பணிகள் செய்யப்பட்டன.
பெரியவிளை, சின்னவிளை ஆகிய கடற்கரை பகுதியில் நின்ற புதர்கள் அகற்றப்பட்டன. மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதுநிலை மேலாளர் ராஜாபாஷா, மனிதவளம் மேம்பாடு பிரிவு முதுநிலை லேமாளர் பினு, அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
பரப்பற்று ஊரில் கை கழுவுதல், நோய் தடுப்பு, சுகாதார ஊக்குவிப்பு செயல் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
மணல் ஆலையில் நடந்த இகழ்ச்சியில் பொது மேலாளர் செல்வராஜன் முன்னிலையில் தொழிலாளர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்தனர். ஆலைவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
No comments