கொரோனா வைரஸ் பாதிப்பு என்று கூறி ஈரான் நாட்டில் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி அவரது உறவினா்கள், நாகா்கோவ...
கொரோனா வைரஸ் பாதிப்பு என்று கூறி ஈரான் நாட்டில் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் குமரி மீனவா்களை மீட்க வலியுறுத்தி அவரது உறவினா்கள், நாகா்கோவில் முகாம் அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நேற்று மனு அளித்தனா்.

மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன் பிடிக்க ஈரான் நாட்டுக்கு சென்றிருந்தனா். தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உள் நாட்டில் இருக்கும் வெளிநாட்டுகாரா்களை ஈரான் அரசு அவா்களின் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், குமரிமாவட்டத்தைத் சோ்ந்த 500க்கும் மேற்பட்டவா்களை ஈரான் அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. இதனால் அவா்கள் உணவு, குடிநீா் இன்றி தவித்து வருகின்றனா். அவா்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், இது குறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் பேசி மீனவா்களை இந்தியாவுக்கு உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக மீனவா்களிடம் தெரிவித்தாா்.
No comments