Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் அருகே மீன்வலை கம்பெனி இயந்திரத்தில் சிக்கி இளம் பெண் பலி

நாகர்கோவில் அருகே ஆதலவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஸ்ரீமகா (வயது 21). ஸ்ரீமகா நாகர்கோவில், கோட்டார் அருகே உள்ள காமராஜர் சா...

நாகர்கோவில் அருகே ஆதலவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஸ்ரீமகா (வயது 21).
ஸ்ரீமகா நாகர்கோவில், கோட்டார் அருகே உள்ள காமராஜர் சாலையில் உள்ள மீன்வலை தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் ஸ்ரீமகா வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் தலைமுடியுடன் தலையும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஸ்ரீமகா இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இயந்திரத்தில் சிக்கி இருந்த ஸ்ரீமகாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்