குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைமையில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆராய்ச்சியாளர் கில்டஸ், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பின...
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைமையில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆராய்ச்சியாளர் கில்டஸ், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜாண் பெனடிட் மற்றும் அருண், பெனோ, ஜெயசிங், ஆரோமல் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டம் மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர் சூசை. இவரது மகன் சகாய அந்தோணி சஜின் (வயது 25). இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.
இவரோடு சேர்ந்து மேலும் 7 மீனவர்களும், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்பவருடைய விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் சகாய அந்தோணி சஜின் ஊருக்கு வர தயாராக இருந்த வேலையில் நேற்று (5-ம் தேதி) அதிகாலையில் அவர் இறந்தார்.
அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments