மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை, திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 46). இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் குடிநீர் விநிய...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை, திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 46).

இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் குடிநீர் விநியோகப் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காருப்பாறை மேலத்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் திடீரென வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து கருணாநிதி மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments