மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு முட்ட...
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நேற்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு முட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
18 வயதிற்கு மேற்பட்ட 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் குளச்சல் அரசு மருத்துவமனையில் நேற்றுவரை 1060 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் கற்பகம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். நேற்று 18 வயதிற்கு மேற்பட்ட 160 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. இன்றும் தொடர்ந்து தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த வாரம் 45 வயதிற்கு மேற்பட்ட 900 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
No comments