மண்டைக்காடு அருகே 145 பவுன் நகையுடன் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். மண்டைக்காடு அருகே இளந்தோப்பு விளை பகுதியை சேர்ந்த 21 ...
மண்டைக்காடு அருகே 145 பவுன் நகையுடன் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மண்டைக்காடு அருகே இளந்தோப்பு விளை பகுதியை சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர், அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎட் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி மாலையில் அந்த பெண் வீட்டில் இருந்தார். திடீரென அவரை காணவில்லை. உடனே வீட்டில் உள்ளோர், வீட்டை சோதித்து பார்த்த போது 145 பவுன் தங்க நகைகளும் மாயமாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். நீண்ட தேடுதலுக்கு பின்னரும் அந்த பெண்ணை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments