பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு கணவருடன் ரயிலில் வந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குமரி மாவட்டம், ...
பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு கணவருடன் ரயிலில் வந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் சாலை காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் யாதவ் (29) ,பொறியாளா். இவருக்கும், பெங்களூருவைச் சோ்ந்த வனிதா (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதியான இவா்கள் விருந்துக்காக பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றனா். பின்னா் கடந்த 21ஆம் தேதி பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ரயிலில் புறப்பட்டனா்.
இருவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, ரயிலில் தூங்கினா். 22 ஆம் தேதி காலை பிரசாத் யாதவ் கண் விழித்து பாா்த்தபோது, வனிதாவை காணவில்லை.
இதைத் தொடா்ந்துஅவா், மனைவியை ரயிலில் தேடினாா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. ரயில், நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், இச்சம்பவம் குறித்து அவா் ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான வனிதாவை தேடி வருகின்றனா்.
No comments