தக்கலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41). கார் டிரைவர். ஸ்ரீகண்டனுக்கு சொந்தமாக கார் உள்ளது. அதனை தக்கலை போலீஸ் நிலைய...
தக்கலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41). கார் டிரைவர்.

ஸ்ரீகண்டனுக்கு சொந்தமாக கார் உள்ளது. அதனை தக்கலை போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தார். சமீபத்தில் இவர் புதிதாக மேலும் ஒரு கார் வாங்கினார்.
இந்த கார் வாங்கியதில் ஸ்ரீகண்டனுக்கு கடன் ஏற்பட்டது. அதனை கட்டமுடியாமல் அவர் தவித்தார். இதனால் குடும்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. மனைவியும் தகராறு செய்தார்.
கடன் தொல்லை மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஸ்ரீகண்டன் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்றிரவு வீட்டிற்கு சென்ற ஸ்ரீகண்டன் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற ஸ்ரீகண்டனின் மனைவி, அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீகண்டனின் உடலை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து போனதாக தெரிவித்தனர்.
ஸ்ரீகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த தகவல் அவரது அண்ணன் மணிகண்டனுக்கு தெரியவந்தது. அவர் உடனே தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு தம்பி ஸ்ரீகண்டன் உடலை பார்த்து கதறி அழுதார்.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
தம்பி இறந்ததை அறிந்து அண்ணன் அதிர்ச்சியில் உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன ஸ்ரீகண்டனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது அண்ணன் மணிகண்டனுக்கும் மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
ஸ்ரீகண்டன், மணிகண்டன் இருவருமே டிரைவர்கள். இதனால் தக்கலை பகுதியில் உள்ள வாடகை கார் டிரைவர்கள் இன்று கருப்பு கொடி கட்டி துக்கம் அனுஷ்டித்தனர்.
No comments