கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 42 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது...
கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 42 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி அடுத்துள்ள பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 46 பேருக்கு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்காப்பகத்தில் 80-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியவா்கள் உள்ளனா்.
இவா்கள் முறையாக பராமரிக்கப்பட்டு குணமடைந்ததும் அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 46 பேரில் 7 போ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஞ்சியுள்ள 39 பேரும் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments