தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாள் நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் கரு...
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாள் நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் அன்று பொங்கலிட்டு வழிபட வேண்டி, பொங்கல் பானை, வெல்லம், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் வியாபாரம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில், மணவாளக்குறிச்சி அந்திசந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வரும், பிரபல வியாபாரி மர்ஃபான் அதிக அளவில் கரும்புகள் இறக்குமதி செய்தார். கரும்புடன், பானை, மஞ்சள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் அவரிடம் வாங்கலாம்.

நேற்று மாலையில் இருக்குமதி செய்யப்பட்ட கரும்புகள் உடனடியாக விற்பனை துவங்கியது. இரவு நேரத்திலும் மக்கள் கரும்புகளை வாங்கி சென்றனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் வேளையில், இன்று கரும்பு வியாபாரம் களைகட்டும் என தெரிகிறது.
No comments