Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

வெள்ளிச்சந்தை அருகே கணவனுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு பெண் தீக்குளித்து தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் மரிய டேவிட் விக்டர், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி மேரி குளோரிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 ...

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் மரிய டேவிட் விக்டர், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி மேரி குளோரிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. மேரி குளோரிபாய் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
கடந்த 9-ம் தேதி மரிய டேவிட் விக்டர் நெல்லை மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். மகள்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். 
வீட்டில் தனியாக இருந்த மேரி குளோரிபாய் கணவனை செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் பதைபதைத்து போன மரிய டேவிட் விக்டர் ஊரில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டில் சென்று பார்க்கும் படி கூறினார். 
அவர்கள் அங்கு சென்று பார்த்த போது மேரி குளோரிபாய் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 
உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு மேரி குளோரிபாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்