மணவாளக்குறிச்சி தருவை நடேசர் ஆலயத்தில் புதிய சமய வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. வெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிந்து தர்ம வித...
மணவாளக்குறிச்சி தருவை நடேசர் ஆலயத்தில் புதிய சமய வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. வெள்ளிமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிந்து தர்ம வித்யாபீடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழகம் மற்றும் அண்டைய மாநிலங்களில் கிராமம் தோறும் சமய வகுப்புகள் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மணவாளக்குறிச்சி தருவை நடேசர் ஆலயத்தில் புதிதாக சமய வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
இதற்கான விழாவிற்கு ஊர் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். அன்பு கண்ணன் வரவேற்றார். ஹிந்து தர்ம வித்யாபீட அமைப்பு செயலாளர் சிவாத்மானந்த மகராஜ் சமய வகுப்பை துவக்கி வைத்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு ஊர் செயலாளர் சுந்தர், பொருளாளர் ஸ்ரீஜித், வக்கீல் மணிகண்டன், ஜவகுமார், ஹிந்து தர்ம வித்யா பீட மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயக்குமார், குருந்தன்கோடு ஒன்றிய துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பிரகலாதன் மற்றும் சமய வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஹிந்து தர்ம வித்யாபீட குருந்தன்கோடு ஒன்றிய அமைப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.
No comments