வீட்டில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நித்திரவிளை அருகே கும்பனாழி...
வீட்டில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

நித்திரவிளை அருகே கும்பனாழி பண்டாரவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (49) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் சுரேஷ்குமார் மதுபழக்கத்திற்கு ஆளாகி வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம். இதன் காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு முன் அவரது மனைவி சிந்து (45) பிரிந்து சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவர் கடந்த டிசம்பர் 30 ம் தேதி மது குடித்துவிட்டு வீட்டிற்கு அவர் வீட்டில் வயதான தாய் தந்தையர் மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு திடீரென ஆட்டோவில் வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து அவரை தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்துள்ளனர் அங்கு சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிட்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக அவரது மகன் அகில் (26) கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
No comments