கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்-1 முதனிலைத் தேர்வு 18 தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழி நடத்தப்படும் குரூ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்-1 முதனிலைத் தேர்வு 18 தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழி நடத்தப்படும் குரூப் 1 முதனிலைத் தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடந்தது.

மாவட்டத்தில் இந்த தேர்வை மொத்தம் 5440 விண்ணப்பதாரர்கள் எழுத இருந்தனர். 18 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர். இதற்காக 4 நடமாடும் குழுக்கள் மற்றும் 2 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு இருந்தது.
18 தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுக்க போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 18 ஆய்வு அலுவலர்கள் செயல்பட்டனர்.
மாவட்ட கலெக்டர் அரவிந்த் குரூப் 1 முதனிலைத் தேர்வு நடந்த 18 மையங்களில் புனித சிலுவை கல்லூரி, இந்து கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments