Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தி போராட்டம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை அர்ச்சனை செய்ய வலியுறுத்தி இந்து கோயில்களின் கூட்டமைப்பினர் கோயிலுக்க...

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை அர்ச்சனை செய்ய வலியுறுத்தி இந்து கோயில்களின் கூட்டமைப்பினர் கோயிலுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஆலயங்கள் அடைக்கப்பட்டது. பக்தர்களின் வேண்டுதலை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் முதல் சில தளர்வுகளுடன் வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் அர்ச்சனை செய்யவும், பிரசாதம் வழங்கவும், பக்தர்கள் பிரகாரங்களை சுற்றி வரவும் அனுமதிக்கப்படவில்லை. 
இதுபோல் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் அர்ச்சனைக்கு வாங்கி வரும் பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்காததால் அவற்றை கோயிலின் முன் வைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 

இதனால் கோயில் வாசலில் பூஜை பொருட்கள் தினமும் குவிந்து வந்தது. இந்நிலையில் குருந்தன்கோடு ஒன்றிய இந்து கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பகவதியம்மனிடம் மனு அளிக்கும் போராட்டம் கோயிலில் நடந்தது. போராட்டத்தின் போது பக்தர்கள் கோயில் வாசல் முன்பு குவித்து வைத்த பூஜை பொருட்களையும் அர்ச்சனைக்கு எடுக்க வேண்டும் எனவலியுறுத்தினர்.
அப்போது கோயிலில் பூசாரிகள் இல்லை. இதனால் பூசாரிகள் வரும் வரை காத்திருந்து அர்ச்சனை செய்த பின்பே செல்வோம் என கூறி அவர்கள் கோவிலுக்குள் அமர்ந்து பஜனை பாடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் குமரி மாவட்ட இந்து கோயில்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி, துணைத் தலைவர் வேல்தாஸ், ஒன்றிய தலைவர் வேலப்பன், துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், மாவட்ட பிரார்த்தனை குழு தலைவி சுதா, துணைத் தலைவர்கள் லட்சுமி தேவி, சித்ரா கிருஷ்ணகுமார், பிரேமலதா மற்றும் சேகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
பின்னர் கோயிலுக்குள் வந்த பூசாரிகள் போராட்டக்காரர்களுக்கு மட்டும் அர்ச்சனை செய்கிறோம் என தெரிவித்தனர். இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. பக்தர்கள் கொண்டு வந்துள்ள பூஜை பொருட்களையும் அர்ச்சனைக்கு எடுக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இதை தொடர்ந்து பத்மனாபபுரம் தொகுதி தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்காரர்களிடமிருந்து மனு பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நாளை முதல் அர்ச்சனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக கோவில் கூட்டமைப்பினர் கோயிலில் உளவாரப்பணி மேற்கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...