நாகர்கோவில் அருகே பிறந்தநாள் விழாவில் 30 பவுன் நகைகள் மாயமானது தொடர்பாக உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில...
நாகர்கோவில் அருகே பிறந்தநாள் விழாவில் 30 பவுன் நகைகள் மாயமானது தொடர்பாக உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). இவரது மகனின் ஒன்றாவது பிறந்தநாள் விழா கடந்த 05-10-2020 அன்று வீட்டில் வைத்து நடந்துள்ளது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் வருகை தந்துள்ளனர்.
முன்னதாக தனது வீட்டில் உள்ள நகை மொத்தம் 30 பவுனை ஒரு பையில் வைத்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் 07-10-2020 அன்று பார்த்தபோது கட்டிலின் அடியில் இருந்த நகைகளை காணவில்லை.
6 மோதிரம், 1 செயின், 6 காப்பு, 2 பிரேஸ் லெட், 2 நெக்லஸ், 2 ஜோடி ஜிமிக்கி கம்மல், ஒரு ஜோடி பெரிய ஜிமிக்கி கம்மல், 2 ஜோடி கம்மல் தோடு அகியபை காணாமல் போன நகைகளாகும்.
காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ 4.50 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, பெரியம்மா, அவரது மகள், மருமகன், உறவினர்கள் என 10 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஷ் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குபதிவு செய்து இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.
No comments