மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.ஐ. பாஸ்கரன் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஐ. பத்மனாபன் சு...
மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.ஐ. பாஸ்கரன் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஐ. பத்மனாபன் சுரேஷ், வரதராஜன் மற்றும் ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி சானிட்டைசர் அல்லது சோப்பினால் கைகளை கழுவ வேண்டும், பைக் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வசதியானவர்கள் வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தினால் ஏழைகள் வீட்டையும் கண்காணிக்க முடியும்.
இதனால் குற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் அவரவர் பகுதிகளில் தங்களுக்குள் ஒரு வாட்சப் குரூப்பை உருவாக்கிக் கொண்டு அதை போலீஸ் வாட்சப் குரூப்புடன் இணைத்து அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் ஏரியாக்களில் எந்த குற்ற செயல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வ இளைஞர்களை இணைத்து இளைஞர் வாட்சப் குழுக்களை உருவாக்கி கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு போலீஸ் முழு ஒத்துழைப்புகளை வழங்கும் உட்பட பல அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
No comments