மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியில் அமைந்துள்ள Y92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சரகத்தின் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கு...
மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் பகுதியில் அமைந்துள்ள Y92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சரகத்தின் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நேற்று (04-01-2021) நடைபெற்றது.

பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சங்கத் தலைவர் கே.அய்யப்பன் (எ) பாம்பே கண்ணன் தொடங்கி வைத்தார்.
துணை தலைவர் சஹருமா பீவி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், செயலாளர் பொறுப்பு ரஜினி தேவி ஆகியோரின் முன்னிலையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
பொது மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசுகளை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
No comments