மணவாளக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜசேகர் அவர்கள் இன்று (05-01-2021) காலை 8:45 மணி அளவில் மரணமடைந்தார். அவர், கடந்த ஒரு மாதகாலம...
மணவாளக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜசேகர் அவர்கள் இன்று (05-01-2021) காலை 8:45 மணி அளவில் மரணமடைந்தார்.

அவர், கடந்த ஒரு மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். அன்னாரது மரணம், அவரின் குடும்பத்தார்களை மட்டுமல்லாது, மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
ராஜசேகர் மரணமடைந்த செய்தி அறிந்த பொதுமக்கள், அவர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர்.

மகனுடன் ராஜசேகர்
அன்னாரது உடல் நல்லடக்கம் நாளை மறுநாள் (07-01-2021) நடைபெறும் என தெரிகிறது. ராஜசேகர் மனைவி ஜோஸ்பின் ரீட்டா அவர்களும் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவியாக பணியாற்றியவர். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
No comments