மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கத்தார் நாட்டில் வைத்து நெஞ்சு வலி காரணமாக இன்று (05-01-2021) காலையில் மரணமடைந்தார். மணவாளக்குறிச்சி ஊரை ...
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கத்தார் நாட்டில் வைத்து நெஞ்சு வலி காரணமாக இன்று (05-01-2021) காலையில் மரணமடைந்தார்.

மணவாளக்குறிச்சி ஊரை சார்ந்தவர் பதர் சமான். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றுள்ள நிலையில், அவர் மரணமடைந்தார்.
தற்போது, அவரின் குடும்பத்தார் நாகர்கோவில் பகுதியில் வசித்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட அவரின் மரண செய்தி அறிந்தது, குடும்பத்தார்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மரணமடைந்த பதர் சமான் அவர்களின் உடலை சொந்த ஊர் கொண்டுவர, அவரின் குடும்பத்தார்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் சொந்த ஊரான மணவாளக்குறிச்சியில் நல்லடக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments