குமரி மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்...
குமரி மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கும்பொருட்டு, பல்வேறு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனந்தநாடாா்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கல்குளம் வட்டம், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளி, கடியப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சென்று aaஆய்வு செய்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த வெப்பமாணி, முகக் கவசங்கள், மாணவா்களுக்கு கு தேவையான சத்து மாத்திரைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை பாா்வையிட்டு, அரசின் வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கேட்டறிந்தும், பள்ளிகளின் சுகாதாரத்தன்மை குறித்தும், கேட்டறிந்து, மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினாா் ஆட்சியா்.
ஆய்வின் போது, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சுசீலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
No comments