மணலிக்கரை அருகே சமையலறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மணலிக்கரை கிறிஸ...
மணலிக்கரை அருகே சமையலறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மணலிக்கரை கிறிஸ்து புரத்தை சேர்ந்தவர் ராபர்ட் (34) கட்டிட ஒப்பந்தகாரர் ஆவார். மனைவி பிரசீனா (28) இவர்களுக்கு ரியானா(6) ஜாக்சன் உள்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவரது வீட்டில் பிரிட்ஜ் சமையலறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிரிட்ஜ் இரவு 7 மணி அளவில் திடீரென வெடித்தது. இதனால் சமையலறை பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சில பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததில் வெடித்து சிதறின.
பொருட்கள் வெடித்த சத்தம்கேட்டு 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் உயிர்பிழைக்க வீட்டை விட்டு வெளியே ஓடினர். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ஊர் மக்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்க சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்தது. தீவிபத்து குறித்து ராபர்ட் கொற்றிகோடு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீ விபத்து சம்பவம் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியது.
No comments