இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகை...
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, சபை போதகர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

குமரி மாவட்டத்தில் ஆர்.சி. ஆலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து கிறிஸ்துமஸ்சை வரவேற்றனர். கிறிஸ்துமஸ் பிறப்பையொட்டி மக்கள் நள்ளிரவில் பிரார்த்தனைக்காக ஆலயங்களுக்கு சென்றதால் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போட்டோஸ்
டயசன், M.A., B.Ed., M.Phil.
பாம்பே பிரிண்டர்ஸ், மணவாளக்குறிச்சி.

No comments