Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

51 வயது பெண்ணின் காதல்.. கபட நாடகம் ஆடிய 26 வயது நாடக காதலன்.. அரங்கேறிய கொடூர கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை காரகோணம் பகுதியைச் சார்ந்தவர் சகா. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வசதி வாய்ப்புக...

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை காரகோணம் பகுதியைச் சார்ந்தவர் சகா. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வசதி வாய்ப்புகள் என்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர், வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்ததால் திருமணம் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அருண் என்ற 26 வயது இளைஞருக்கும், சகாவுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தேவாலயத்தில் வைத்து கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், சமையல் செய்யும் நேரத்தில் தனது மனைவி சகா மின்சாரம் தாக்கி பலியானதாக காவல்துறையினருக்கு அருண் தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளத்துவங்கிய நிலையில், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், பெண் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த அருண், வரும் கடந்த சில தினங்களாக சகாவிடம் சண்டையிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
இதனையடுத்து அருணை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று மேற்கொண்ட விசாரணையில், 51 வயதாகும் சகா முகத்தில் பவுடர் பூசி இளம் பெண் போல வலம் வந்துள்ளார். இதனை அறியாத அருண் காதலில் விழவே, ஒரு கட்டத்தில் காதலிக்கு 51 வயதாகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காதலியை கழட்டிவிட நினைத்தபோது, அவரது பெயரில் 10 ஏக்கர் நிலமும், தினமும் ஆயிரக்கணக்கில் அழகு நிலைய வருமானமும் வருவது தெரியவந்துள்ளது. 
அருண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலும், 51 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள அருணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேவாலயத்தில் வைத்து சகாவின் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் தன்னை கவனிக்காமல், மனைவி அவரது வயதான தாயை கவனித்துக் கொள்கிறாள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். 
இந்நிலையில், திருமண புகைப்படம் என அருண் சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை பதிவு செய்யவே, அவரது நண்பர்கள் பாட்டி ஹீரோ என்று அவரைக் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருண் சகாவை கொலை செய்ய திட்டமிட்டு, சொத்துக்களை தன் வசப்படுத்தும் முயற்சித்துள்ளான். ஏற்கனவே வீட்டில் சமையல் செய்யும்போது கொலை முயற்சி அரங்கேறியதை பக்கத்து வீட்டாரிடம் பெண்மணி தெரிவிக்கவே, அடுத்த முயற்சியில் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...