மணவாளக்குறிச்சி மணல் ஆலை மினரல்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுக்கூட்டம் ஆலை சங்க அலுவலகத்தில் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. து...
மணவாளக்குறிச்சி மணல் ஆலை மினரல்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுக்கூட்டம் ஆலை சங்க அலுவலகத்தில் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

துணைத்தலைவர் நாகராஜ் வரவேற்று பேசினார். பொதுசெயலாளர் திருமால் சங்க செயல் அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் ரத்தினம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க பாதுகாவலராக டாக்டர் மோசஸ், செல்வராஜ் ஆகியோரும், தலைவராக விஜயதரணி எம்.எல்.ஏ., துணைத்தலைவராக நாகராஜ், பொதுசெயலாளராக சுந்தரலிங்கம் காந்திகுமார், எத்திராஜ், பொருளாளராக ரத்தினம், அமைப்பு செயலாளராக கார்த்திகேயன் வெங்கடேஷ் ஆகியோரும் மற்றும் 19 செயற்குழு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் ஆலைக்கு தேவையான தாதுமணலை பெற தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். தாது மணல் நிறைந்த பகுதிகளில் தாது மணல் எடுப்பதற்கு மணல் ஆலையும், டாமின் நிறுவனமும் கூட்டாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கூட்டாக செயல்பட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மருத்துவ காப்பீடு தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments