Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மேல்புறத்தில் காங்கிரசார் ஏர் கலப்பையுடன் பேரணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சிய...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் மேல்புறம் சந்திப்பில் ஏராளமான காங்கிரசார் மாட்டு வண்டிகளுடன் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மேல்புறம் சந்திப்பில் இருந்து குழித்துறையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 
போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் மோகன்தாஸ், சதீஷ், அருள்ராஜ், குமார், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் சிறப்புரையாற்றினார். பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. பேரணி தொடங்கியதும் விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலையில் கட்டிக் கொண்டும், ஏர் கலப்பையை தோளில் சுமந்து கொண்டும் பேரணியில் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
இதில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மேல்புறம் யூனியன் கவுன்சிலர் ரவிசங்கர், காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் அம்பி, மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 
இதையடுத்து காங்கிரசாரிடம் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் 70 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...