Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சல் அருகே பாறையில் அமர்ந்து இயற்கையை ரசித்தபோது 2 வாலிபர்களை கடல் அலை இழுத்து சென்றது

குளச்சல் அருகே கடல் பகுதியில் பாறையில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்த 2 வாலிபர்கள் கடல் அலையில் சிக்கி மாயமானார்கள். குமரி மாவட்டம் கருங்கல் அ...

குளச்சல் அருகே கடல் பகுதியில் பாறையில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்த 2 வாலிபர்கள் கடல் அலையில் சிக்கி மாயமானார்கள்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறை ஓலவிளை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜெபின் (வயது 25). சென்னை தனியார் நிறுவனத்தில் பார்த்து வருகிறார். செங்கல்பட்டு சிங்கபெருமாள் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். 
அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) மற்றும் அவரது உறவினர் பாலாஜி (19) ஆகியோருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட ஜெபின் ஊருக்கு வந்தார். அவர்கள் கப்பியறையில் உள்ள ஜெபின் வீட்டில் தங்கியிருந்து, பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். 

நேற்று குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சியில் உள்ள ஜெபினின் உறவினர் வீடு கிரகபிரவேசம் நடந்தது. இதில் ஜெபின் உள்பட 3 பேரும் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், அந்த பகுதியில் உள்ள பாரியக்கல் கடற்கரைக்கு சென்றனர். 

3 பேரும் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த அலையில் 3 பேரும் சிக்கினர். சுரேஷ் நீந்தி கரை சேர்ந்தார். ஜெபினையும், பாலாஜியையும் கடல் அலை இழுத்து சென்றது.
இது குறித்து ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வாலிபர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு வந்தார். 

மேலும் ஜெபினின் உறவினர்கள், நண்பர்கள் கடற்கரையில் திரண்டனர். ராஜேஷ்குமார் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு வந்து ஜெபினின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். 
கடலோர காவல் படையினரிடம் மீட்பு பணிக்கான போதிய உபகரணங்கள் மற்றும் விசைப்படகு இல்லாததால் அவர்களை மீட்க இயலவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...