அம்மாண்டிவிளையில் பைக் மீது கார் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மணவாளக்குறிச்சி அருகே கோட்டவிளைய...
அம்மாண்டிவிளையில் பைக் மீது கார் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மணவாளக்குறிச்சி அருகே கோட்டவிளையை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சிவலிங்கம்(29). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பைக்கில் கோட்டவிளையிலிருந்து அம்மாண்டிவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அம்மாண்டிவிளை சந்திப்பில் செல்லும்போது எதிரே வந்த கார் சிவலிங்கம் பைக் மீது எதிர்பாராமல் மோதியது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் காரை ஓட்டி வந்த கோட்டவிளையை சேர்ந்த விஷ்ணுராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments