மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் “அதிமுக-வை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திமுக கழக தலைவர் ஸ்டாலின் ...
மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் “அதிமுக-வை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திமுக கழக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் என். சுரேஷ் ராஜன் ஆலோசனைபடி இன்று (29-12-2020) மணவாளக்குறிச்சி பேரூர் திமுக சார்பில் பம்மத்துமூலை (வார்டு எண்:14) பகுதியில் "அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் நிஜாம் தலைமையில், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டிராஜன் சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் வெள்ளிமலை பேரூர் செயலாளர் தேவதாஸ், முட்டம் ஊராட்சி செயலாளர் அனனியாஸ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரபு, ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அஜிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மெர்லின்பிரபு, ஜாஹீர் உசோன், சேகர், சுப்பையன் மூர்த்தி பாலக்கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் "அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற தீர்மானம் மக்கள் எழுச்சியடன் பெருவாரியான பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

No comments