மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் பெண்ணிடம் தகராறு செய்த சுகாதாரத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ...
மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் பெண்ணிடம் தகராறு செய்த சுகாதாரத்துறை ஊழியர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாந்தி லட்சுமி(46). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் செல்வன் என்ற காசி லிங்கம் (47). இவர் நாகர்கோவிலில் சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் சாந்தி லட்சுமி டீக்கடையில் இருக்கும்போது அங்கு வந்த செல்வன் சாந்தி லட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுப்பட்டார்.
பின்னர் அவர் பெண் என்றும் பாராமல் தகாத செயலில் ஈடுப்பட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது குறித்து சாந்தி லட்சுமி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் செல்வன் மீது பெண் வன்கொடுமை உள்பட சில பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
No comments