சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று (29-12-2020) காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது இரவு சிறப்பு மிக்க சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நட...
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று (29-12-2020) காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது இரவு சிறப்பு மிக்க சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் கடந்த 21-ம் தேதி மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வாகன பவனியும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. 7-ஆம் நாள் திருவிழாவான காலை பல்லக்கு வாகன பவனியும், இரவு கைலாச பர்வத வாகன பவனியும் நடந்தது.
ஒன்பதாம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில் விநாயகர் தேரை சிறுவர் சிறுமியரும், சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வந்தனர் தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் கோயில் முன்புறம் சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.
கோட்டார் விநாயகர் மருங்கூர் மற்றும் குமாரகோவில் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தாய் தந்தையான சிவன் பார்வதியை பிரிந்து செல்ல மனமில்லாமல் மூன்று முறை முன்னும், பின்னுமாக சென்று வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
மூன்றாம் முறை தாய் தந்தையான, சிவன் பார்வதி ஆகியோர் குழந்தைகளை பிரிய மனமில்லாமல் வேகமாக கோயிலுக்குள் ஓடிச் செல்லும் சிறப்புமிக்க சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை ஆருத்ரா தரிசனமும், இரவு ஆராட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கொரோனா தாக்கம் எதிரொலியாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டனர். தொண்டு நிறுவனங்கள் வாயிலாக முகக் கவசங்கள் சானிடைசர் வழங்கப்பட்டது...
No comments