பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் அரசு பஸ்கள் எங்கும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விடும் வசதியால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளத...
பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் அரசு பஸ்கள் எங்கும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விடும் வசதியால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் மாவட்ட அலுவலகங்கள் பெரும்பாலும் நாகர்கோவில் பகுதிகளில் தான் உள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் நாகர்கோவில் பகுதிகளிலேயே அதிகமாக உள்ளது. எனவே மாவட்டத்தில் இருந்து தினமும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்போல் வந்து செல்கின்றனர்.
இதில் பைக், கார் போன்ற வாகனங்களில் வந்து செல்பவர்களை தவிர மற்ற அனைவரும் அரசு பஸ்களில் தான் தங்கள் பகுதிகளில் இருந்து நாகர்கோவிலிக்கு வந்து செல்கின்றனர். இப்படி வந்து செல்பவர்கள் வடசேரி பஸ் ஸ்டாண்டு, அண்ணா பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அதேநேரத்தில் அரசு பஸ்கள் அந்த வழியாக சென்றாலும் பஸ் ஸ்டாப் இல்லாமல் ஒதுக்கப்பட்ட பஸ் ஸ்டாப்பில் இறங்கி நீண்ட தூரம் நடந்து வர வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
தற்போது பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் இயக்கப்படும் அரசு பஸ்கள் பார்வதிபுரத்தில் இருந்து வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன் கோவில், வடசேரி பஸ் ஸ்டாண்டு, அண்ணா ஸ்டேடியம், மணிமேடை, வேப்பமூடு, அண்ணா பஸ் ஸ்டாண்டு, கோட்டார் போலீஸ் ஸ்டேஷன், கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பு, செட்டிகுளம் ஜங்ஷன், கலெக்டர் ஆபீஸ், டெரிக் ஜங்ஷன், பால்பண்ணை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி வழியாக மீண்டும் பார்வதிபுரம் சென்றடைகிறது. பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்கள் இயக்கப்படுவதால் நாகர்கோவிலிக்கு வருபவர்களில் பலருக்கு ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்துக்கு செல்வதற்கு சுலபமாக இருந்து வந்தது. இந்த சர்குலர் சர்வீஸ் பயணிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வந்தது. இந்நிலையில் பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் அரசு பஸ்கள் எங்கும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
இது குறித்து பார்வதிபுரம் டூ பார்வதிபுரம் சர்குலர் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவிக்கையில் எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் அனைத்து தரப்பினருக்கும் சுலபமாக உள்ளது. இதன் மூலம் சிரமம் இல்லாத வகையில் நாகர்கோவில் பகுதிகளில் செல்ல முடிகிறது. இது பயணிகள் மத்தியில் வரவேற்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.
No comments